சர்கார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா ரஜினி?

தனியார் கல்லூரியில் இன்று நடக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை.
 | 

சர்கார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா ரஜினி?

தனியார் கல்லூரியில் இன்று நடக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்' படத்தின் சிங்கிள் ட்ராக்கான 'சிம்டாங்கரன்' பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இணையத்தில் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து 'ஒருவிரல் புரட்சி' பாடலும் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவையொட்டி படத்தின் ஐந்து பாடல்கள் கொண்ட டிராக் லிஸ்டை வெளியிட்டது படக்குழு.

தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடக்க உள்ள இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கம் பேட்ட படத்தில் ரஜினி நடித்து வருகிறார். சர்கார் படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP