ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்: தமன்னா வரவேற்பு

நாட்டிற்கு நல்லது செய்யவேண்டும் என்று அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் போன்ற நடிகர்களை வரவேற்பதாகவும், விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
 | 

ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்: தமன்னா வரவேற்பு

நாட்டிற்கு நல்லது செய்யவேண்டும் என்று அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் போன்ற நடிகர்களை வரவேற்பதாகவும், விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த திரைப்பட நடிகை தமன்னா, நகைக்கடையினை திறந்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு நகைகளை வழங்கி முதல் விற்பனையினையும் தொடங்கி வைத்தார்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமன்னா பேசுகையில், ‘இந்த வருடம் தன்னுடைய 7 திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு திரைப்படங்கள் வந்ததில்லை. வருகின்ற டிசம்பர் மாதம் கோபிசந்துடன் நடித்த தெலுங்கு திரைப்படம் வெளியாகவுள்ளது. அதில் கபடி கோச் ஆக நடித்துள்ளேன். ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்ற முனைப்புடன் நடித்து வருகிறேன். நம்பர் 1 நடிகை என்ற போட்டியில் நான் இல்லை நான் போட்டியே பார்த்ததில்லை .13 வருடங்களாக நான் உள்ளேன் பலர் புதிதாக வருகிறார்கள். அப்படி வருவது சினிமாதுறைக்கு நல்லது தான். எனக்கு என்னை உண்மையாக நேசிக்கும் ரசிகர்கள் பலர் உள்ளது என் அதிர்ஷ்டம் அதனாலேயே நான் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வருடத்தில் நான் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளேன் பெட்ரோமெக்ஸ் போன்ற பேய் படங்களிலும் நடித்துள்ளேன்’ என்றார். 

மேலும், ‘ரஜினி, கமல் போன்றவர்களை ஒரு ரசிகையாக நான் நேசித்து வருகிறேன். அதனால் தான் அவர்களுடன் இணைந்து இருந்த புகைப்படங்களை டிவிட்டரில் போட்டேன், எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை என்றார். ரஜினி கமல் போன்று நடிகர்கள் அரசியலுக்கு வந்து இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது செய்வேன் என கூறிவரும்போது அவர்களை வரவேற்கிறேன்’ என்றார். மீம்ஸ் பார்த்தால் அதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

முன்பு தான் ஒரு குறிப்பட்ட வயது ஆனவுடன் அல்லது திருமணம் ஆனவுடன் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை காலம் மாறிவிட்டது பெண்களுக்காகவே கதை எழுத நிறைய பேர் உள்ளனர். நீங்கள் மணமகன் பார்த்துக்கொடுத்தால் திருமணம் செய்ய தயார்’ என்றார். 

மேலும், ‘நல்ல கதை இருந்தால் எந்த நடிகருடனும் நடிப்பேன் என்ற தமன்னா, எந்த நடிகருடன் நடிக்க விருப்பம் என்ற கேள்விக்கு, விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க ஆசை, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடிக்க ஆசை’ என்றார்.

ரஜினி, கமல் ஆகியோருடன் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன். நடிகைகளுக்கு ஆக்ஷன் திரைப்படங்கள் கிடைப்பதில்லை தற்போது அதுமாதிரி படங்கள் வருவது நல்லது.’ என்றார். தமிழ் நாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பலமாக சிரித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP