27 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் ஒளிப்பதிவாளர்!

கார்த்திக் சுப்பராஜின் பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பேட்ட திரைப்படத்தில் ரஜினி நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறாராம்.
 | 

27 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் ஒளிப்பதிவாளர்!

2.0 திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'பேட்ட' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். 

பொங்கலுக்கு வெளியாகும் 'பேட்ட' திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மார்ச் மாதம் இதன் படபிடிப்பு துவங்கும் எனவும் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லைகா நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படும் இந்தத் திரைப்படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியிருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் ரஜினியுடன் 1991-ல் தளபதி படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸுடன் துப்பாக்கி மற்றும் ஸ்பைடர் ஆகிய படங்களிலும் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP