விஜய்யை காப்பியடித்த ரஜினி! - ஆதாரம் உள்ளே!

'பேட்ட' திரைப்படத்தின் ட்ரைலரின் இறுதி ஷாட்டில் ரஜினி டான்ஸ் ஆடும் போது வரும் பின்னணி இசை, அனிருத் இசையமைத்திருந்த கத்தி படத்தின் மியூஸிக் போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
 | 

விஜய்யை காப்பியடித்த ரஜினி! - ஆதாரம் உள்ளே!

நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'பேட்ட' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

வெகு நாட்களுக்குப் பிறகு ஸ்டைலான, மாஸான ரஜினியை ட்ரைலரில் பார்த்த ரசிகர்கள் திக்கு முக்காடிப் போயிருக்கிறார்கள். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. 

ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான பேட்ட படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் படத்தின் ட்ரைலரின் இறுதி ஷாட்டில் ரஜினி டான்ஸ் ஆடும் போது வரும் பின்னணி இசை, அனிருத் இசையமைத்திருந்த கத்தி படத்தின் மியூஸிக் போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

சினிமாவில் காப்பி கலாச்சாரம் அதிகரித்திருக்கும் சூழலில், அனிருத் அவருடைய இசையை அவரே காப்பியடித்திருப்பது, ரஜினி ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP