கோமாளி பட ட்ரைலரில் ரஜினி குறித்த காட்சி: கமல் வருத்தம்!

கோமாளி திரைப்பட ட்ரைய்லரில் ரஜினி குறித்த காட்சியை நடிகர் கமல்ஹாசன் வருத்தப்பட்டதாக மக்கள் நீதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
 | 

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள கோமாளி திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அதில் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறுவது போன்ற காட்சியை வைத்து விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் இன்று காலை கோமாளி பட ட்ரைலர் பார்த்ததாகவும், அதில் இடம்பெற்றிருக்கும் ரஜினியின் காட்சியை பார்த்தவுடன் பட தயாரிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரஜினி குறித்த காட்சியை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என கூறி வருத்தப்பட்டதாகவும் முரளி அப்பாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கோமாளி பட ட்ரைலரில் ரஜினி குறித்த காட்சி: கமல் வருத்தம்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP