ராஜமெளலியின் புதிய படம் துவக்கம்!

பாகுபலி இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து, நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்துத் தனது அடுத்தப் படத்தை இயக்குகிறார் ராஜமெளலி. இந்தப் படத்திற்கான பூஜை தற்போது போடப்பட்டுள்ளது.
 | 

ராஜமெளலியின் புதிய படம் துவக்கம்!

இந்திய இயக்குநர்களில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குநர்களில் முக்கியமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. மகதீரா, பாகுபலி, பாகுபலி 2 என அவர் இயக்கிய திரைப்படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இவர், தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோரை வைத்துத் தனது புதிய படத்தை இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘டி.வி.வி எண்டர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தத் படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய தொகையாம்.

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராஜமெளலியின் அப்பா, விஜயேந்திர பிரசாத் தான் இதற்கும் கதை எழுதியுள்ளார்.

தற்போது இதன் பூஜை நடந்துள்ளது. அதோடு இந்தத் திரைப்படத்தின் படபிடிப்பு வரும் 19-ம் தேதி முதல் துவங்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP