கொலைக்காரன் பெயரை கண்டு பிடித்தால் பரிசு: விஜய் ஆண்டனி

'கொலைகாரன்' படத்தில் கொலைகாரன் கதாப்பாத்திரத்தின் பெயரை கண்டுபிடிக்கும் 4 பேருக்கு ஃபாஸ்ட்டிராக் வாட்ச் பரிசாக வழங்கப்படும். கொலைகாரன் திரைப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியுடன் பிரீமியர் காட்சிக்கான 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கொலைக்காரன் பெயரை கண்டு பிடித்தால் பரிசு: விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, ‘காளி’ படத்துக்குப் பிறகு  தற்போது 'கொலைக்காரன்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். ’ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கிறார். மேலும் நாசர், சீதா, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை தியா மூவிஸ் சார்பாக ப்ரதீப் தயாரிக்க, ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.

இந்நிலையில் படக்குழு தற்போது போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.''கொலைகாரன்' படத்தில் கொலைகாரன் கதாப்பாத்திரத்தின் பெயரை கண்டுபிடிக்கும் 4 பேருக்கு ஃபாஸ்ட்டிராக்  வாட்ச் பரிசாக வழங்கப்படும்.  கொலைகாரன் திரைப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியுடன், பிரீமியர் காட்சிக்கான 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்காரன் பெயரை கண்டு பிடித்தால் பரிசு: விஜய் ஆண்டனி
மேலும், கேள்விக்கான பதிலை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் kgcontest2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பரிசு பெறுபவர்களின் விவரம் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிவிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP