அருள்நிதிக்கு ஜோடியாகும் பிரியா?

நடிகர்கள் அருள்நிதியும், ஜீவாவும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்கள். இதில் ஏற்கனவே மஞ்சிமா மோகன் ஹீரோயினாக கமிட்டாகியிருந்தார், இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் மற்றொரு நடிகையாக தேர்வாகி இருக்கிறார்
 | 

அருள்நிதிக்கு ஜோடியாகும் பிரியா?

இரண்டுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது தற்போது, ட்ரெண்டாகி விட்டது. தமிழ் சினிமாவின் முதன்மையான இயக்குநர் மணிரத்னம் கூட தனது, 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி என நான்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கியிருந்தார். 

இந்நிலையில் தற்போது நடிகர்கள் ஜீவாவும், அருள்நிதியும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்கள். இது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்தப் படத்தை 'மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். ஹீரோயினாக, மஞ்சிமா மோகன் கமிட்டாகியிருக்கிறார். 

இதனை சூப்பர் குட் மூவிஸ் சார்பில், ஜித்தன் ரமேஷ் இதனை தயாரிக்கிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. 

இந்நிலையில் தற்போது இதில் மற்றொரு ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். இவர் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் மஞ்சிமா, ஜீவானின் ஜோடியாகியிருப்பது உறுதியாகியிருக்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP