கேன்ஸ் விழாவில் காஞ்சிபுரம் பட்டு சேலையில் கலக்கிய பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 | 

கேன்ஸ் விழாவில் காஞ்சிபுரம் பட்டு சேலையில் கலக்கிய பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வரும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், பாலிவுட் நடிகைகள் பலரும் வித்தியாசமான உடை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வருவது வழக்கம். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து சென்றுள்ளார். அதிலும், பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வந்துள்ளார்.

அவர் கோல்டன் கலர் பட்டு சேலையில் ரெட் கார்ப்பெட்டில் தேவதை போல் காட்சி அளிப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுத்துள்ளனர். மேலும் பாரம்பரிய உடைக்கு அவரது ரசிகர்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. 

newstm.in

காஞ்சிபுரம் பட்டு சேலையில் கங்கனா ரனாவத்! வைரல் புகைப்படங்கள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP