A1 படத்தை தடைசெய்யக்கோரி காவல் ஆணையரிடம் மனு!

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள A1 திரைபடத்தை தடைசெய்யக்கோரி அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
 | 

A1 படத்தை தடைசெய்யக்கோரி காவல் ஆணையரிடம் மனு!

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள A1 திரைபடத்தை தடைசெய்யக்கோரி அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். 

நடிகர் சந்தானம் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் அக்யூஸ்டு நெம்பர் 1 படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில், லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் காதல் வருவது போன்று படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அக்ரஹாரத்து பெண் தன் காதலை தெரிவிக்க, ஆஃபாயில் சாப்பிடுவதை அப்பெண்ணின் தந்தை பார்த்து விட்டு மயக்கம் அடையும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

A1 படத்தை தடைசெய்யக்கோரி காவல் ஆணையரிடம் மனு!

இப்படம் பிராமண சமுதாயம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அக்யூஸ்டு நெம்பர் 1 படத்தை தடைசெய்யக்கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் அந்தணர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP