நற்பணிகளை முன்னிறுத்தி பாண்டவர் அணி தேர்தலை சந்திக்கிறது: நடிகர் நாசர்

கடந்த 3 ஆண்டுகளில் சங்கத்துக்காக செய்த பணிகள், திட்டங்களை கொண்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை சந்திக்க உள்ளதாக நாசர் தெரிவித்துள்ளர்.
 | 

நற்பணிகளை முன்னிறுத்தி பாண்டவர் அணி தேர்தலை சந்திக்கிறது: நடிகர் நாசர்

கடந்த 3 ஆண்டுகளில் சங்கத்துக்காக செய்த பணிகள், திட்டங்களை கொண்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை சந்திக்க உள்ளதாக நாசர் தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் இரண்டாவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள  நடிகர் நாசர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் சிபிராஜ், அஜய்ரத்னம், நந்தா, பிரேம் உள்ளிட்டோர் சென்னை தி.நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர், "ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு தானும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணை தலைவர்கள் பதவிக்கு பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

நாங்கள் கடந்த 3 ஆண்டுகளில் சங்கத்துக்காக செய்த திட்டங்களை முன்னிறுத்தி, இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளோம். நடிகர் சங்க கட்டிட பணியே எங்களின் பணிக்கான சாட்சி. 

நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை. எந்தவொரு தலையீடுமின்றி இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது என நாசர் தெரிவித்தார்.

நடிகர் சங்க தேர்தல் குறித்து நடிகர் ராதாரவி கருத்துக்கு பதிலளித்த நாசர், "ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தாலும், சீனியர் நடிகர் என்கிற அடிப்படையில் அவர் கருத்தை தெரிவித்துள்ளார். எனவே அவர் கூறிய குற்றச்சாட்டு குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP