'அதிக செல்வாக்குள்ள 50 இந்திய இளைஞர்கள்' பட்டியலில் இடம் பிடித்த பா.ரஞ்சித்!

இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்து 'அட்டக்கத்தி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் தற்போது 'அதிக செல்வாக்குள்ள 50 இந்திய இளைஞர்கள்' என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளார்
 | 

'அதிக செல்வாக்குள்ள 50 இந்திய இளைஞர்கள்' பட்டியலில் இடம் பிடித்த பா.ரஞ்சித்!

இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்து 'அட்டக்கத்தி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். முதல் படத்திலேயே, பொழுதுபோக்குடன் சேர்த்து, சமுதாய கருத்துகளையும் வைத்திருந்தார். 

பிறகு நடிகர் கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' படத்தை இயக்கினார். வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் அப்பகுதி மக்களின் எதார்த்த வாழ்க்கையை இயல்பாகக் காட்டியிருந்தார். பிறகு உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்தை வைத்து, 'கபாலி, காலா' என அடுத்தடுத்தப் படங்களை இயக்கினார். சமூக வேறுபாடு மற்றும் பிரிவினைகளை பேசிய இந்தப் படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. 

சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி, 'பரியேறும் பெருமாள்' படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்நிலையில், ஜி.க்யூ இந்தியா வெளியிட்டுள்ள 'அதிக செல்வாக்குள்ள 50 இந்திய இளைஞர்கள்' என்ற பட்டியலில் இடம் ரஞ்சித் பிடித்துள்ளார். "நசுக்கப்படும் குரல்களை சினிமாவின் மூலம் உலகறியச் செய்வதற்காக தனது படங்களை பயன்படுத்த அவர் தவறவில்லை" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தவிர இந்த பட்டியலில், நடிகைகள் ஆலியா பட், பார்வதி, டாப்ஸி, நயன்தாராவும், நடிகர் வருண் தவானும், கிரிக்கெட் வீரர் வீராத் கோலியும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP