ஆஸ்கார் விழாவில் ஆஸ்கார் நாயகன்! வைரலாகும் புகைப்படம்!

உலகின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில், இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நமது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டுள்ளார்.
 | 

ஆஸ்கார் விழாவில் ஆஸ்கார் நாயகன்! வைரலாகும் புகைப்படம்!

உலகின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில், இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நமது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விழாவில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 

கடந்த 2009 ம் ஆண்டு நடந்த விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லினர்' திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் அப்படத்தில் இடம்பெற்ற  ‘ஜெய் ஹோ' பாடலுக்கு என ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில், தற்போது நடைபெறும் விழாவில் கலந்துகொண்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் விழாவில் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்கார் விழாவில் ஆஸ்கார் நாயகன்! வைரலாகும் புகைப்படம்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP