பிக்பாஸில் முதல்முறையாக 'ஓப்பன் நாமினேஷன்'; மது, சாக்ஷியை தேர்வு செய்யும் லாஸ்லியா!

பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல்முறையாக 'ஓப்பன் நாமினேஷன்' நடைபெறுகிறது.
 | 

பிக்பாஸில் முதல்முறையாக 'ஓப்பன் நாமினேஷன்'; மது, சாக்ஷியை தேர்வு செய்யும் லாஸ்லியா!

பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் 'கன்பெஷன் ரூம்' எனப்படும் ரகசிய அறையில் வைத்து நாமினேஷன் நடைபெறும். ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேட் செய்ய வேண்டும். 

இந்நிலையில், இந்த வாரம் முதல்முறையாக 'ஓப்பன் நாமினேஷன்' நடைபெறுகிறது. வழக்கமாக டாஸ்க் நடைபெறும் ஹாலில் வைத்து நாமினேஷன் நடைபெறுகிறது.

அனைவரின் முன்னிலையில் நாமினேட் செய்யும்போது கண்டிப்பாக இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் கலவரம் வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றைய நாளின் முதல் ப்ரோமோவில் மது, சாக்ஷி ஆகிய இருவரையும் நாமினேட் செய்கிறார் லாஸ்லியா. மற்றவர்கள் யாரையெல்லாம் நாமினேட் செய்யபோகிறார்கள் என்பதை பொறுத்திருந்து இன்றைய நிகழ்ச்சியில் காணலாம். 

கடந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் நேற்று மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP