ஆயிரத்தில் ஒருவன் 2-க்கு தயாராகும் செல்வராகவன்?

செல்வராகவனின் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் நடித்து வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவது, தனது தீராத ஆசை என ட்வீட் செய்திருக்கிறார் செல்வா.
 | 

ஆயிரத்தில் ஒருவன் 2-க்கு தயாராகும் செல்வராகவன்?

இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. கேங்ஸ்டர் படமான இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அழகம் பெருமாள், பாலாசிங், சிநேகா, சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

புதுப்பேட்டை வெளியாகி 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள. 

தற்போது இது பற்றிய பதிவொன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் செல்வா. "நண்பர்கள் புதுப்பேட்டை 2 எப்போது எனக் கேட்கிறார்கள். நடக்கும் என நான் பதிலளிப்பேன். இருப்பினும் எனது தீராத ஆசை ஆயிரத்தில் ஒருவன் எடுக்க வேண்டும் என்பது தான். சோழனின் பயணம் தொடர வேண்டும்" என்றபடி இருக்கிறது அந்த பதிவு. 

 

 

இதனைப் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் செல்வராகவனின் அந்த ட்வீட்டை லைக் செய்து தெறிக்க விடுகிறார்கள். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP