ஒய்ஜி மகேந்திரனின் தாயார் உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார் 

93 வயதை எட்டியுள்ள ராஜலட்சுமி பார்த்தசாரதி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று இவர் காலமானார்.
 | 

ஒய்ஜி மகேந்திரனின் தாயார் உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார் 

ஒய்ஜி மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி. இவர் கடந்த 1958ம் ஆண்டு சென்னையில் உள்ள தியாகராய நகரில் பத்மா சேஷாத்ரி என்ற பள்ளியை துவக்கி நடத்தி வருகிறார். இவர் பள்ளி நடத்தும் முன்பு செய்தியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது கல்விச்சேவையை  பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது. 

93 வயதை எட்டியுள்ள ராஜலட்சுமி  பார்த்தசாரதி,   உடல்நலக்குறைவு  காரணமாக  சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.  இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி  மருத்துவமனையில் இன்று  இவர் காலமானார்.

ஒய்ஜி மகேந்திரனின் தாயார் உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார் 

ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை திநகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பால பவன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4 மணியளவில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜலட்சுமி  பார்த்தசாரதியின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP