நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து ட்வீட்

இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, "வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை; யாருக்கு வாக்களிப்பது என்பது அவரவர் உரிமை" என்றார்.
 | 

நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து ட்வீட்

ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை என்று வாக்களித்த பின்னர் பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காலை முதலே  வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இன்று பிற்பகல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் பாடலாசிரியர் வைரமுத்து. பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை; யாருக்கு வாக்களிப்பது என்பது அவரவர் உரிமை" என்றார். 

தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP