இரண்டு கோடி வேண்டாம் இந்திய நிறம் போதும் : சாய் பல்லவி

நடிகைகளின் மேக்கப் தோற்றத்தை பார்த்து ஏமாந்து, தானும் அவர்களைப்போல மாற வேண்டும் என எண்ணி, கண்ட அழகு சாதன பொருட்களை வாங்கி முகத்தி பூசி, உள்ளதையும் கெடுத்துக்கொள்ளும் இளம் பெண்கள், சாய் பல்லவியை பார்த்தாவது திருந்துவார்களா?
 | 

இரண்டு கோடி வேண்டாம் இந்திய நிறம் போதும் : சாய் பல்லவி

பிரபல நடிகைகளை பின்னுக்கு தள்ளி தனது அற்புத நடிப்பால் வளர்ந்து வரும் நடிகை சாய் பல்லவி .இவர் தமிழ்நாட்டில் உள்ள கோத்தகிரியில் பிறந்தவர். மருத்துவ படிப்பை முடித்துவிட்டு கலை மீது கொண்ட ஆர்வத்தால் நடனம், நடிப்பு என தன்னை கலையின் பக்கம் திசை திருப்பிய இவரின் கலை வாழ்க்கையில் மிகபெரிய திருப்பமாக அமைந்தது பிரேமம். இந்த படத்தில் மேக்கப்பே போடமால் அவரது இயற்கை நிறத்துடன் ஆசிரியராக நடித்து அசத்தியிருந்தார் சாய் பல்லவி.

அதோடு சமீபத்தில் வெளிவந்த தனுஷின் மாரி2 திரைப்படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தனது நடனத்திறமையையும் நிருப்பித்துள்ள இவர்.  'இரண்டு கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்' என மறுத்துள்ளார். அப்படி என்ன விளம்பரம் என்றால், அதுதாங்க, வெளி நாட்டவரைப்போல காட்டும் அழகு க்ரீம்  விளம்பரமாம்.  இந்த விளம்பரத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்ததற்கான காரணம்தான்  மிக வியப்பை அளிப்பதாக உள்ளது.

இரண்டு கோடி வேண்டாம் இந்திய நிறம் போதும் : சாய் பல்லவி

 இதுகுறித்து விளக்கமளித்த சாய் பல்லவி: "ந‌மது நிறம் இந்தியர்களின் உண்மையான நிறம் . நாம் ஏன் வெளிநாட்டவர்களை போல் மாற வேண்டும். இந்தியர்களாக இயல்பாகவே இருக்கலாமே என கூறிய அவர். மிகவும் கருப்பானவர்கள் ஆப்பிரிக்கா நட்டை சேர்ந்தவர்கள் ஆனால் உண்மையில் அவர்கள் தான் மிக அழகானவர்கள்,  நமது இந்திய நிறத்தை  கொச்சைப்படுத்தி விட்டு, வெளி நாட்டவரின் நிறத்தை பெருமிதப்படுத்த விரும்பவில்லை" என்பது போல தெரிவித்துள்ளார்.

இரண்டு கோடி வேண்டாம் இந்திய நிறம் போதும் : சாய் பல்லவி

நடிகைகளின் மேக்கப் தோற்றத்தை பார்த்து ஏமாந்து, தானும் அவர்களைப்போல மாற வேண்டும் என எண்ணி கண்ட அழகு சாதன பொருட்களை வாங்கி முகத்தி பூசி உள்ளதையும் கெடுத்துக்கொள்ளும் இளம் பெண்கள்,  சாய் பல்லவியை  பார்த்தாவது திருந்துவார்களா? 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP