பிரபல நடிகர் மீதான பாலியல் வழக்கை விடுவதாக இல்லை... நடிகை சூளுரை

பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என நடிகை தனுஸ்ரீ தத்தா போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மும்பை போலீசார் நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளனர்.
 | 

பிரபல நடிகர் மீதான பாலியல் வழக்கை விடுவதாக இல்லை... நடிகை சூளுரை

திரைத்துறையை சார்ந்த நடிகைகள் பலர், தங்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து அண்மை காலமாக புகார்கள் எழுப்பி வருகின்றனர். அதிலும் ‘மீ டூ’ வந்த பிறகு இப்புகார்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த வகையில், கடந்த 2008 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தி மொழி திரைப்படம் ’ஹார்ன் ஓகே பிளஸ்’ படப்பிடிப்பின்போது பிரபல பாலிவுட் நடிகரான  நானா படேகர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என நடிகை தனுஸ்ரீ தத்தா போலீசில் புகார் கொடுத்திருந்தார். நானா படேகர், ரஜினி நடிப்பில் வெளி வந்த "காலா" படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மும்பை போலீசார், நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நடிகை தனுஸ்ரீ, இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP