ஆதித்ய வர்மா  திரைப்படத்தின் புதிய‌ அப்டேட்

'அர்ஜுன் ரெட்டி' ரீமேக், ஆதித்ய வர்மா படத்திற்கான புதிய அப்டேட்டை பதிவு செய்துள்ளனர் படக்குழு. இதில் ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கான 65% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாக பதிவிட்டுள்ளனர்.
 | 

ஆதித்ய வர்மா  திரைப்படத்தின் புதிய‌ அப்டேட்

தெலுங்கில், வெற்றிபெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தை, தமிழில் 'வர்மா' என்ற பெயரில் இயக்குனர் பாலா ரீமேக் செய்து, பின்னர், கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்த‌ நிலையில்,   'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில் மீண்டும் 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் த‌மிழில் ரீமேக்காகிறது.

இந்த திரைப்படத்திலும், விக்ரமின் மகன் துருவே, கதாநாயகனாக நடிக்கிறார்.  மேலும்,  ப்ரியா ஆனந்த், அன்பு தாஸன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கிரீசாயா இப்படத்தை இயக்க, ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார், மேலும், அர்ஜுன் ரெட்டி படத்திற்கு, இசையமைத்த ரதன் இப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

ஆதித்ய வர்மா  திரைப்படத்தின் புதிய‌ அப்டேட்

தற்போது, 'ஆதித்ய வர்மா' படக்குழு, போர்ச்சுகலின் தலைநகரமான, லிஸ்பனில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர், இது தொடர்பான, புகைப்படங்களை படக்குழுவினர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், மீண்டும் இந்த படத்திற்கான புதிய அப்டேட்டை பதிவு செய்துள்ளனர். இதில் ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கான 65% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாக பதிவிட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP