எந்த பக்கமும் மோடி மாதிரி இல்லையே: விவேக் ஓபராயை கிண்டல் செய்த ட்விட்டர்வாசிகள்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் விவேக் ஓபராய், எந்த பக்கம் பார்த்தாலும் மோடி போல இல்லை என்று ட்விட்டர் வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
 | 

எந்த பக்கமும் மோடி மாதிரி இல்லையே: விவேக் ஓபராயை கிண்டல் செய்த ட்விட்டர்வாசிகள்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் விவேக் ஓபராய், எந்த பக்கம் பார்த்தாலும் மோடி  போல இல்லை என்று ட்விட்டர் வாசிகள் தெரிவித்து வருகின்றனர். 

"பி.எம்.நரேந்திர மோடி" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிற பாலிவுட் படத்தில் பிரதமர் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்தப் படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் ஜனவரி மாதம் 7ம் தேதி வெளியானது. 

இதனை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் வெளியிட்டார். 23 மொழிகளில் தயாராகி உள்ள இந்த திரைப்படத்தை சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் எஸ் சிங் ஆகியோர் தயாரித்துள்ளனர். 

இதில் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் மற்றும் அரசியலில் அவர் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்கும் படமாக உருவாகி உள்ளது.  ஓமங் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பொம்மன் இரானி, பர்கா பிஷ்ட், மனோஜ் ஜோஷி, ஜரினா வஹாப், பிரஷாந்த் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் முன்கூட்டியே ஏப்ரல் 5ம் தேதி வெளியிடுகிறோம் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்திப் எஸ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் மோடியை போன்ற கெட்அப்பில் இருக்கும், விவேக் ஓபராயின் புகைப்படங்கள் வெளியாகின. இதனை இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். அந்த போஸ்டர்களை எந்த பக்கம் பார்த்தாலும் விவேக் ஓபராய் கொஞ்சம் கூட மோடி போல இல்லை என்று கூறிவருகின்றனர். எனினும் அரசியல் களம் சூடுப்பிடித்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP