தேசியவிருது பாடகி ‘அனுராதா’ தான் எனது தாய்! வெளியான தகவலால் திரையுலகில் பரபரப்பு!!

பிரபல பின்னணி பாடகி அனுராதா பாட்வாலின் மகள் என்று கூறி கேரளாவின் திருவனந்தபுரத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவர் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
 | 

பத்மஸ்ரீ மற்றும் தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ள பிரபல பின்னணி பாடகி அனுராதா பாட்வாலின், இசையமைப்பாளர் அருண் பட்வாலை மணந்தார். இந்நிலையில், 1974 ஆம் ஆண்டு பிறந்த கர்மலா மோடெக்ஸ் என்பவர் தற்போது திருவனந்தபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் அனுராதா பாட்வாலின் தனது தாய் என வழக்கு தொடர்ந்துள்ளார்.  

தேசியவிருது பாடகி ‘அனுராதா’ தான் எனது தாய்! வெளியான தகவலால் திரையுலகில் பரபரப்பு!!

இது குறித்து கர்மலா மோடெக்ஸ் தெரிவித்திருப்பதாவது.. சுமார் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, மரண தருவாயில் எனது வளர்ப்புத் தந்தையான பொன்னச்சன் எனது உண்மையான தாய் அனுராதா பாட்வால் என கூறினார். அனுராதா அந்த சமயத்தில் பாடல் தொழிலில் முன்னேறி கொண்டிருந்ததால், குழந்தையாக இருந்த என்னை வளர்க்க முடியாமல் நான் பிறந்த 4 நாட்களில் என்னை வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட பொன்னச்சன், அனுராதாவுடன் நட்பு கொண்டிருந்தார்.  பின்னர், அவர் கேரளாவுக்கு இடமாற்றம் பெற்றார். தான் அனுராதா பட்வாலின் மகள் என்பது எனது வளர்ப்பு தாய் ஆக்னஸூக்கு கூட தெரியாது என தந்தை தெரிவித்ததாக கூறினார். 

தேசியவிருது பாடகி ‘அனுராதா’ தான் எனது தாய்! வெளியான தகவலால் திரையுலகில் பரபரப்பு!!

மூன்று மகன்களைக் கொண்ட இந்த தம்பதியினர், கர்மலாவை நான்காவது குழந்தையாக வளர்த்தனர். 82 வயதான ஆக்னஸ் தற்போது படுக்கையில் இருக்கிறார், அல்சைமர் நோயால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. அவரது தந்தை அவரிடம் நம்பிக்கை தெரிவித்த பின்னர், கர்மலா பாடகியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயன்றுள்ளார். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை என்றும், சிறிது நாட்களின் எனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்து விட்டதாகவும் கூறும் கர்மலா, இதையடுத்தே சட்டப்பூர்வமாக அனுகுவதாக கூறியுள்ளார். கர்மலாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP