25 வது நாளை கொண்டாடும் தேசிய விருது பெற்ற படம்!

பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் உருவாகி தேசிய விருது வென்ற 'டூலெட்' திரையிடப்பட்டு , இன்றுடன் 25 நாட்களாவதை , படக்குழு கொண்டாடி வருகின்றனர்.
 | 

25 வது நாளை கொண்டாடும் தேசிய விருது பெற்ற படம்!

 

சென்னையில் வீடு தேடி அலையும் நடுத்தர குடும்பத்தை பற்றிய கதைக்களத்துடன் உருவான திரைப்படம் டூலெட்.  இதனை கல்லூரி, பரதேசி, தாரதப்பட்டை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன் இயக்கி உள்ளார்.

'டூலெட்' படத்தில் செழியனின் உதவியாளர் சந்தோஷ் நாயகனாக நடிக்க, ஷீலா நாயகியாக நடித்துள்ளார். இவர்களது மகனாக தருண் என்ற சிறுவன் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருது பெற்றது.

மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 32  விருதுகளை பெற்ற இப்படம் ,  பிப்ரவரி 21ம் தேதில் திரையிடப்பட்டு ,  இன்றுடன் 25  நாட்களாவதை , படக்குழு கொண்டாடி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP