எனது உயிருக்கு ஆபத்து: நடிகை புகார்

தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற மீரா மிதுன் சென்னை காவல் ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.
 | 

எனது உயிருக்கு ஆபத்து: நடிகை புகார்

தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி "மிஸ் தமிழ்நாடு" பட்டம் பெற்ற மீரா மிதுன் காவல் ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு சவுத் அழகிப்போட்டியில் பட்டம் பெற்றவர் மீரா மிதுன். இவர் தானா சேர்ந்த கூட்டம் , 8 தோட்டாக்கள் போன்ற பல்வேறு படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். இந்நிலையில் தனது உயிருக்கு  பாதுகாப்பு வேண்டி மீரா மிதுன் சென்னை காவல் ஆணையரிடம் இன்று புகார் அளித்தார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது  தமிழ்நாட்டில் மாடலிங் மற்றும் மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் தமக்கு பெருமையை தேடி தந்ததாகவும், இதனால் தமிழ் பெண்கள் மாடலிங் துறையில் சாதிக்க, மிஸ் தமிழ்நாடு தீவா 2019 என்ற பெயரில் அழகிப்போட்டியை நடத்த தான் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், தமிழ் பெண்களை சாதித்து விடக்கூடாது என்பதற்காக, ஏற்கெனவே மாடலிங் தொழிலை நடத்தி வரும் அஜித் ரவி என்பவர் தொழில் போட்டி காரணமாக தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும், தகாத வார்த்தைகளால் பேசியும் வருவதாக மீரா மிதுன் குற்றம்சாட்டினார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP