மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்!

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் மிக்சி, கிரைண்டர் விவகாரத்தை கையிலெடுத்து அ.தி.மு.க-வினரை உசுப்பேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
 | 

'சர்கார் ' திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்தது ஆளும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், மிக்ஸி, கிரைண்டர் இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி வந்தனர். பேனர்கள் கிழிப்பு, காட்சிகள் ரத்து என அ.தி.மு.க-வினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்!

இதையடுத்து, சர்கார் மறுதணிக்கை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டன. இதனையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.  ’’படத்தில் கோடிகோடியாக சம்பாதிக்கும் திரையுலகினர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர். அந்தப்படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்கியிருக்கிறார்கள். சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. ஊடகங்கள் இனி இதை பெரிதுப்படுத்த வேண்டாம்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்!

இந்த நிலையில் `சர்கார்' படக்குழுவினர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி நேற்று கோவலம் கடற்கரையில் உள்ள உயர்தர ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளனர். அப்போது கேக் வெட்டி சர்கார் வெற்றியை கொண்டாடியுள்ளனர். அந்த கேக்கின் மேலிருக்கும் மெழுகுவத்தியை ஒளியேற்றுவதுபோல் ஒரு புகைப்படத்தை ' Whose hand is this ?' என்ற கேப்ஷனுடன் தனது இண்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுளார் ஏ.ஆர்.ரஹ்மான். அதே நேரத்தில் அந்த கேக்கில் சிறு சிறு மிக்ஸி, கிரைண்டர்களால் அலங்காரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்!

இலவச பொருள்களை விஜய் ரசிகர்கள் ஒருபுறம் போட்டு உடைப்பதே பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில் சர்கார் படக்குழுவின் இந்த கேக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது மீண்டும் அ.தி.மு.கவினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP