”மீ-டூ” ஒரு பெரிய விஷயமே இல்லை: கபாலி நடிகை...!

நடிகை ரித்விகா, ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது மீ டூ குறித்த கேள்விக்கு,"மீ டூ என்பது என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம் அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்றார்
 | 

”மீ-டூ” ஒரு பெரிய விஷயமே இல்லை: கபாலி நடிகை...!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன்படி கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்த, நடிகை ரித்விகா, ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது பேசிய அவர், "ரஜினி போன்ற மிகப்பெரிய மாமனிதரை நான் பார்த்ததில்லை. அவர் என்றுமே மிக எளிமையானவர்' என்றார். 

மேலும், மீ டூ குறித்த கேள்விக்கு பதிலளித்த ரித்விகா "மீ டூ என்பது என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம் அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு பாதிப்படைந்தவர்கள் வெளியே வந்து தைரியமாக சொல்ல வேண்டும் என பாடகி சின்மயி புகார் தெரிவித்து உள்ளார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP