மாஸ் மற்றும் ஸ்டைலான ரஜினிகாந்த்: 2.0 குறித்து ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள 2.0 திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு உள்ளார்.
 | 

4 ஆண்டுகளாக கடும் உழைப்பில் உருவாகி இருக்கும் 2.0 திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரோபோ சிட்டிக்கு ஜோடியாக இப்படத்தில் ஏமி ஜேக்சன் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதுகுறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு உள்ளார். அதில், "2.0 திரைப்படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலான ரஜினிகாந்தையும், அக்‌ஷய் குமாரின் சிறப்பான நடிப்பையும் வெகுவாக ரசித்தேன். லைகா மற்றும் இயக்குநர் சங்கருக்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP