வைரமுத்துவை கழற்றிவிட்ட மணிரத்னம்! தொடரும் மீ டு யுத்தம்?!

தமிழ் திரையுலகில் அனைவரின் எதிர்பார்ப்பிலும் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன்.
 | 

வைரமுத்துவை கழற்றிவிட்ட மணிரத்னம்! தொடரும் மீ டு யுத்தம்?!

தமிழ் திரையுலகில் அனைவரின் எதிர்பார்ப்பிலும் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, பிரபு  என்று முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது பொன்னியின் செல்வன்.

வைரமுத்துவை கழற்றிவிட்ட மணிரத்னம்! தொடரும் மீ டு யுத்தம்?!

மணிரத்னத்தின்  எல்லாப்  படங்களுக்கும் வைரமுத்து தான் ஆஸ்தான பாடல் ஆசிரியர். பொன்னியின் செல்வனிலும்  அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாகத் தான் அறிவிக்கப்பட்டிருந்தது. சில பாடல்களும் இசையமைத்து ,எழுதி  முடிக்கப்பட்டு விட்டன என்றே கூறப்பட்டது. தற்போது  'மீடு' விவகாரத்தில் சிக்கியவரை எப்படி இந்தப் படத்தில் எழுத வைக்கலாம் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்ற  வாரம் வெளியானது.  வைரமுத்து பெயர்  அதில் இடம் பெற்றிருக்கவில்லை. வைரமுத்துவிற்குப் பதிலாக வேறு சில பாடலாசிரியர்களை வைத்து பாடல்கள் எழுதப்பட்டு வருகின்றன.  கபிலன் எழுதிய இரண்டு பாடல்கள் படத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் பின் மற்ற பாடல்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜாவுடனான பிரிவிற்கு பின்னர் மணிரத்னம் தான் வைரமுத்துவுக்கு வாழ்க்கை கொடுத்தார். அதன் பிறகு தான் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதி திரையுலகில் மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கினார். தற்போது மணிரத்னமே வைரமுத்துவை கழற்றிவிட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP