தமிழ் சினிமாவுக்கு உயரம் தந்தவர் மகேந்திரன்: வைரமுத்து புகழாரம்

தமிழ் சினிமாவுக்கு இந்திய அளவில் உயரத்தை தந்தவர் இயக்குநர் மகேந்திரன் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
 | 

தமிழ் சினிமாவுக்கு உயரம் தந்தவர் மகேந்திரன்: வைரமுத்து புகழாரம்

தமிழ் சினிமாவுக்கு இந்திய அளவில் உயரத்தை தந்தவர் இயக்குநர் மகேந்திரன் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். 

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்(79)  உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவையொட்டி, பல்வேறு திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் சினிமாவுக்கு இந்திய அளவில் உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் என்றும், நாடகத்தன்மை கொண்ட தமிழ் திரைப்படங்களை யதார்த்தம் மற்றும் அழகியல் தன்மைக்கு உயர்த்தி காட்டியவர்" கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், "மகேந்திரனை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் கலையன்பர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொண்டு, எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்கிறேன். வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகம் தான் வாழ்க்கை என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச்செய்தி" என்றும் வைரமுத்து குறிப்பிட்டார்.

newstmin

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP