துணை ஜனாதிபதிக்கு நன்றி கூறிய மஹர்ஷி நாயகன்...!

கடந்த மே 9ம் தேதி திரைக்கு வந்த' மஹர்ஷி' திரைப்படம் குறித்து ட்விட் செய்துள்ளார் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அதில், 'மஹர்ஷி' திரைப்படம் கிராமப்புற மனிதர்களையும், விவசாயிகளையும் உயர்வாக பேசியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
 | 

துணை ஜனாதிபதிக்கு நன்றி கூறிய மஹர்ஷி நாயகன்...!

விவசாயிகளின் பிரச்னைகளை கருவாக கொண்டு உருவாகிய படம் மஹர்ஷி.  மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். மேலும் படத்திற்கான இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார்.

கடந்த மே 9ம் தேதி திரைக்கு வந்த' மஹர்ஷி' திரைப்படம் குறித்து ட்விட் செய்துள்ளார். இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அதில், 'மஹர்ஷி' திரைப்படம் கிராமப்புற மனிதர்களையும், விவசாயிகளையும் உயர்வாக பேசியிருக்கிறது.  விவசாயிகள் குறித்த உரையாடல்களின் அவசியத்தை எடுத்துக்கூறுவதால்,'மஹர்ஷி' ஒரு முக்கிய படம் என தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டிற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் மகேஷ் பாபு, உங்களது வாழ்த்து, என்னையும் என் படக்குழுவினரையும் கௌரவப்படுத்துவதாக அமைந்துள்ளது. நன்றி சார், என பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP