அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

தமிழகத்தில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 | 

அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

தமிழகத்தில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கடந்த ஆண்டு விஜய்யுடன் இணைந்து கீர்த்தி நடித்திருந்த சர்கார் திரைப்படம் பெரும் வெற்றியைப்பெற்றது. இதனையடுத்து அவர், மலையாளத்தில் வரலாற்றுக் 5கதையாக உருவாகும் ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே அவர் பாலிவுட்டில் அமித் ஷர்மா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியான போதும் யாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

இது இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீர்த்தி இந்தியில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP