காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு - வைரல் படங்கள்!

2016-ல் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காவ்யா மாதவனை திருமணம் செய்துக் கொண்டார் திலீப். காவ்யா ஏற்கனவே திருமணமாகி 2011-ல் விவாகரத்தானவர். தற்போது இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது
 | 

காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு - வைரல் படங்கள்!

மலையாள நடிகை மஞ்சு வாரியரை 1998-ம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துக் கொண்டார் நடிகர் திலீப். இவர்களுக்கு மீனாட்சி என்ற பெண் குழந்தையும் உள்ளார். இப்போது அவருக்கு 18 வயது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக 2014-ல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார் திலீப். அதற்கடுத்த ஆண்டான 2015-ல் இவர்களுக்கு விவாகரத்தும் கிடைத்தது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டவர் காவ்யா மாதவன். அவர் தான் திலீப்பையும், மஞ்சுவையும் பிரித்து விட்டதாக, மஞ்சு வாரியரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்த போதும் அமைதி காத்து வந்தார் மஞ்சு.  

இதற்கிடையே 2016-ல் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காவ்யா மாதவனை திருமணம் செய்துக் கொண்டார் திலீப். காவ்யா ஏற்கனவே திருமணமாகி 2011-ல் விவாகரத்தானவர். 

காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு - வைரல் படங்கள்!

இந்நிலையில் தற்போது இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதல் குழந்தை பெற போகும் காவ்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திலீப்புக்கு இப்போது 50 வயது ஆகிறது. அவரது மகள் மீனாட்சி, திலீப் - காவியாவுடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP