சிம்புவுடன் இணையும் கேத்ரின் தெரெஸா?

தெலுங்கில் வெளியான ‘அட்டாரிண்டிகி தாரேடி’ படத்தை தற்போது தமிழில் ரீமேக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. தெலுங்கில் பிரனிதா நடித்த கேரக்டரில் நடிக்க கேத்ரின் தெரெஸா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
 | 

சிம்புவுடன் இணையும் கேத்ரின் தெரெஸா?

தெலுங்கில் வெளியான ‘அட்டாரிண்டிகி தாரேடி’ படத்தை தற்போது தமிழில் ரீமேக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. தெலுங்கில் இந்தப் படத்தை திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார். பவன் கல்யாண்,  சமந்தா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்கள். பிரனிதா, நதியா முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 

இதன் தமிழ் ரீமேக் ரைட்ஸை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ வாங்கி, சுந்தர் சி-யை வைத்து இயக்கி வருகிறது. இதில் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் தற்போது ஜியார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கில் பிரனிதா நடித்த கேரக்டரில் நடிக்க கேத்ரின் தெரெஸா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

வரும் ஆண்டு ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.  
newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP