சிவகுமாரை கிண்டல் செய்த கஸ்தூரி... கடுப்பான கார்த்தி !

செல்ஃபி எடுக்க வந்தவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதை கிண்டல் செய்யும் வகையில், தன்னுடன் செல்ஃபி எடுத்த நடிகை கஸ்தூரியை, நடிகர் கார்த்தி மேடையிலேயே திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 | 

சிவகுமாரை கிண்டல் செய்த கஸ்தூரி... கடுப்பான கார்த்தி !

தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்தவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதை கிண்டல் செய்யும் வகையில், தன்னுடன் செல்பி எடுத்த நடிகை கஸ்தூரியை நடிகர் கார்த்தி மேடையிலேயே திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'ஜூலை காற்றிலே' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் கஸ்தூரி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

அதில் கார்த்தியை பேச அழைக்கும்போது, அவருடன் கஸ்தூரி செல்ஃபி எடுத்துள்ளார். மேலும் "உங்க அப்பா இல்லை, ஆகையால் அவசரமாக ஒரு செல்ஃபி எடுத்து கொள்ளலாம்" என கஸ்தூரி கூறினார். அதனைக் கேட்டதும் "இது தேவையில்லாத விஷயமா இருக்கு" என்று கார்த்தி கூறிவிட்டு மைக்கில் பேசத் தொடங்கினார். 

அவர் பேசும்போது, "செல்ஃபிக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுப்பது என்றில்லை. முகத்துக்கு முன்னால் கேமராவை கொண்டு வந்து வைக்கிறார்கள். அதிலும் பின்னால் ஒரு பிளாஷ், முன்னால் ஒரு பிளாஷ்... அது கண்ணில் பட்டால் என்ன ஆகும்? போட்டோ எடுக்கும்போது கேட்டுவிட்டு எடுக்க  வேண்டும் என்ற மரியாதை கூட இல்லாமல் இருக்கிறோம் என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இப்படி இங்கு சொன்னால் தான் உண்டு. வேறு எங்கும் இதனை சொல்ல முடியாது" என்றார் கோபமாக..

இந்த நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP