கோபம் எனும் கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் சிவகுமார்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

கோபம் எனும் கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் வகையை சேர்ந்தவர் சிவகுமார் என்று செல்பி எடுத்தவரின் செல்போனை சிவகுமார் கீழே தள்ளிவிட்டது குறித்து சமூக வலைதளத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பதிவிட்டுள்ளார்.
 | 

கோபம் எனும் கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் சிவகுமார்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

கோபம் எனும் கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் வகையை சேர்ந்தவர் சிவகுமார் என்று செல்பி எடுத்தவரின் செல்போனை சிவகுமார் கீழே தள்ளிவிட்டது குறித்து சமூக வலைதளத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பதிவிட்டுள்ளார். 

மதுரையில் நடந்து நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடன் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை நடிகர் சிவகுமார் கீழே தள்ளிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்க பலரும் சிவகுமாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து சிவகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பெருவாரியான அறிஞர்களும் கலைஞர்களும் தங்கள் கொள்கைகளையும் நற்பழக்கங்களையும் பாதுகாக்கும் அரணாகவே அவர்களுடைய கோபம் இருந்துவருவதை பார்த்து வருகிறேன். என் பெரியப்பா சிவகுமார் தன் கோபம் எனும் கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் வகையே! அதேநேரம் கோப்பபடாத எவரும் ஒரு வழக்கத்திற்குள் வாழ இவ்வுலகம் எளிதாக விடுவதுமில்லை என்பதையும் நான் பார்க்கிறேன்!

இன்றைய நாள் முழுவதும் தன் சுய இன்பத்திற்காகவும், தங்களின் ஒழுங்கீனங்களை நியாயப்படுத்தவும் அனாயசமாக அர்த்தமற்ற கருத்துக்களை வாந்தியெடுத்துக் கொண்டிருக்கும் நவநாகரீக சமூகநலப் போராளிகளைக் கண்டு நானும் வாந்தியெடுப்பதில் தவறில்லை எனவே தோன்றியது!

இன்று அனைவரும் கேலி செய்துகொண்டிருக்கும் அவரின் உரைகள் மூலம் வந்த வருமானம் அனைத்தையும் கல்வி உதவிகள் செய்துகொண்டிருக்கும் ஒரு மாமனிதர் தன் அனுமதியின்றி படமெடுத்தவரை அறையாமல் அலைபேசியை தட்டிவிட்டதற்கே இங்கிதமில்லாமல் இங்கே இங்கிதம் கற்பிக்க முயலும் எந்தவொரு அறிவாளியும் என் வலைத்தளங்களை விட்டு உடனே வெளியேறுமாறு உங்களிடமிருந்து கற்றுக்கொண்ட அதே இங்கிதமில்லாமல் ஆணையிடுகிறேன்!

பலதிறமைகள் படைத்த புத்திசாலியைவிட பலவீனமே இல்லாதவன் பெரும் பலசாலியென எனக்குக் கற்றுவித்தவர்

உன் வருமானம் எதுவாயினும், வந்ததில் 25% தானமாக கொடு, வாழ்க்கை சிற்பாகும் என எனக்குக் கற்பித்தவர்

காசில்லாமல் கையேந்துபவருக்கு, உபதேசம் அளிப்பதை விட உன்னால் இயன்றதை கொடுத்துவிட்டு நடையைக்கட்டு என எனக்கு சொல்லிக்கொடுத்தவர்

இன்றுகூட அடுத்தவர் அனுமதியில்லாமல செல்பி எடுப்பது தவறு என அனைவருக்கும் அடித்துக் கூறியிருக்கிறார்! அவ்வளவே!!

பின்குறிப்பு: இதை ஏதோ சினிமா சண்டைக்காட்சி அளவுக்கு எபக்டுகள் போட்டு அதிவிளம்பரம் தேடிக்கொண்ட அந்த செய்தி நிறுவனத்திற்கும் அதே கோபத்துடன் என் வசைகளைப் பரிசளிக்கிறேன்!" என தெரிவித்து இருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP