மீண்டும் துவங்கும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்

லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள ராகவா மீண்டும் லட்சுமி பாம் படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி என்றும், எனது உணர்வுகளை புரிந்து கொண்ட அக்ஷய் குமாருக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
 | 

 மீண்டும் துவங்கும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்

காஞ்சனா திரைப்படம் வெளியாகி எட்டு வருடங்கள் கழித்து, தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குகிறார். மேலும் இதில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க, நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் காஞ்சனா ரீமேக் லட்சுமி பாம் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னை கேட்காமல் ரிலீஸ் செய்ததுள்ளதாகவும், அந்த போஸ்டரின் காட்சி அமைப்பும் தனக்கு பிடிக்காததால், காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை கைவிடுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.

பின்னர் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் மீண்டும் லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள ராகவா, மீண்டும் 'லட்சுமி பாம்' படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி என்றும், எனது உணர்வுகளை புரிந்து கொண்ட அக்‌ஷய் குமாருக்கு நன்றி"என பதிவிட்டுள்ளார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP