கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்: இசை ஏ.ஆர்.ரஹ்மான்!

கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அவரே எழுதி, இயக்கி, நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவுள்ளார். இந்த தகவல்களை கமல்ஹாசனே அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 | 

கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்: இசை ஏ.ஆர்.ரஹ்மான்!

கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கிறான்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அவரே எழுதி, இயக்கி, நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவுள்ளார். இந்த தகவல்களை கமல்ஹாசனே அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது. 

ஏ.ஆர்.ரஹ்மான், கமல் கூட்டணியில் இந்தியன், தெனாலி படங்கள் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது முறையாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் தற்போது இணைந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன் - 2 திரைப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் நிறுத்தப்பட்டு, மீண்டும் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP