சுஜாவுக்கு பிரியாணி விருந்து வைத்த கமல்ஹாசன்!

புதிதாக திருமணம் செய்துக் கொண்ட சிவாஜி பேரன் சிவகுமார் மற்றும் நடிகை சுஜா வாருணி ஆகியோருக்கு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.
 | 

சுஜாவுக்கு பிரியாணி விருந்து வைத்த கமல்ஹாசன்!

புதிதாக திருமணம் செய்துக் கொண்ட சிவாஜி பேரன் சிவகுமார் மற்றும் நடிகை சுஜா வாருணி ஆகியோருக்கு  நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் இணைந்தவர் நடிகை சுஜா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது தந்தையின் மறைவை நினைத்து உருகிய சுஜா வருணிக்கு தான் அப்பா ஸ்தானத்தில் உன்னுடன் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியிருந்தார் கமல்ஹாசன்.

சுஜா வருணியும், சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவக்குமாரும் 11 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவருடைய திருமணம் கடந்த நவம்பர் 19ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதற்காக முதல் அழைப்பிதழை நடிகர் கமல்ஹாசனுக்கு சுஜா வருணி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் திருமணம் முடித்த புதுமண தம்பதியான சுஜா வருணி - சிவக்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் விருந்தளித்துள்ளார். அதற்கான புகைப்படங்களை நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இதே போல சுஜாவும் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP