கஜா புயல் - ரஜினி சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலகினர் பலரும் உதவி செய்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் நேரடியாக வழங்க கேட்டுக் கொண்டுள்ளார்
 | 

கஜா புயல் - ரஜினி சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு, அரசியல் கட்சியினர், பிரபலங்கள், தன்னார்வலர்கள் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

நடிகர்களைப் பொருத்தவரை சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணம் மற்றும் பொருட்களை நிவாரணமாக வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்தும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

அவர் சார்பில், ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் மூலமாக நேரடியாக வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP