‘தலைவர்168’ இல் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

‘தலைவர்168’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி இணைந்துள்ளதாக அப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 | 

‘தலைவர்168’ இல் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

‘தலைவர்168’ திரைப்படத்தில்  நகைச்சுவை நடிகர் சூரி இணைந்துள்ளதாக அப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை எந்த இயக்குநர் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கையில், சிறுத்தை சிவா ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ரஜினிக்கு 168ஆவது திரைப்படம் என்பதால், தற்போதைக்கு ‘தலைவர்168’ என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

‘தலைவர்168’ இல் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

இந்த நிலையில்,  ‘தலைவர்168’ இல் நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கவுள்ளார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்துடன் சூரி நடிக்கவிருப்பது இதுவே முதல்முறையாகும். சூரி இதற்கு முன்பாக, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP