ஜோதிகாவின் ராட்சசி படத்துக்கு தடை?

ராட்சசி திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
 | 

ஜோதிகாவின் ராட்சசி படத்துக்கு தடை?

ராட்சசி திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் ராட்சசி. கெளதம்ராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதத்தை காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. படமும் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ராட்சசி திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. ராட்சசி திரைப்படம் பள்ளி ஆசிரியர்களை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் நீக்கக் கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP