ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படமான வெளிவரும்“தி அயர் லேடி”

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் ‘The Iron Lady’ எனும் பெயரில் தயாராகிறது.
 | 

ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படமான வெளிவரும்“தி அயர் லேடி”

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் ‘The Iron Lady’ எனும் பெயரில் தயாராகிறது. 

இயக்குநர் மிஷ்கின், உதவி இயக்குநர் பிரியதர்ஷினி சில தினங்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக கதை விவாத பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘The Iron Lady’ திரைப்படத்தில் நடிகை நித்யாமேனன் ஜெயலலிதா கதாப்பாத்திரத்திலும், நடிகை வரலட்சுமி சசிகலாவாகவும் நடிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தின் பிரமாண்டமான தொடக்கவிழா விரைவில் நடக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த நாளிலிருந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP