ஹீரோக்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷையும்  விட்டு வைக்காத ஸ்ரீரெட்டி 

உடல் எடையை குறைத்ததால் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு நோயாளி போல காட்சியளிக்கிறார் என்று பதிவிட்டதுடன். சமீபத்தில் வெற்றியடைந்த கீர்த்தி சுரேஷின் படமான "நடிகையர் திலகம்" வெற்றி பெற்றதற்கு காரணம் இயக்குனரின் பவர் தானே, தவிர கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல என விமர்சித்துள்ளார் ஸ்ரீரெட்டி .
 | 

ஹீரோக்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷையும்  விட்டு வைக்காத ஸ்ரீரெட்டி 

ஸ்ரீரெட்டி என்றாலே இப்போது என்ன சர்சையை கிளப்ப போறாங்களோ? என்று தான் அனைவருக்கும் தோன்றும். இந்த அளவிற்கு சர்சைக்கு பேர் போனவர் ஸ்ரீ ரெட்டி.

அவர் அடிக்கடி இயக்குனர் ,தயாரிப்பாளர், நடிகர் என யாரையும் மிச்சம் வைக்காமல் திரை துறையை சார்ந்த பலரின் மீதும் பாலியல் புகார்களை முன் வைத்து வருபவர்.  அதோடு அரைகுறை ஆடையுடனான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து சர்ச்சைக்கு ஆளாகி வருபவர் ஸ்ரீரெட்டி. 

பெரும்பாலும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் குறித்து புகார் பட்டியலை வாசித்து வருபவர் ஸ்ரீ ரெட்டி. ஆனால் தற்போது  ஆண்கள் மீதான புகார்கள் கூறுவது என்ற வழக்கத்திற்கு மாறாக பிரபல நடிகை குறித்தும் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பதிவிட்டிருந்தார். அதில் நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம்.விமானத்தில் இருந்தவர்கள் என்னுடன் மட்டுமே புகைப்படம் எடுத்து கொண்டனர்.

அங்கு அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை . உடல் எடையை குறைத்ததால் அவர் பார்ப்பதற்கு நோயாளி போல காட்சியளிக்கிறார் என்று பதிவிட்டதுடன்.

ஹீரோக்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷையும்  விட்டு வைக்காத ஸ்ரீரெட்டி 

சமீபத்தில் வெற்றியடைந்த கீர்த்தி சுரேஷின் படமான "நடிகையர் திலகம்"  வெற்றி பெற்றதற்கு காரணம் இயக்குனரின் பவர்  தானே,  தவிர  கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல எனவும் விமர்சித்துள்ளார். அதோடு கீர்த்தி சுரேஷை  விட  சாய்பல்லவி திறமையாலும், குணத்தாலும் சிறந்தவர் என பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. 

newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP