அவெஞ்சர்ஸ் 'தானோஸ்'-க்கு இப்படி ஒரு விளம்பரமா? - அசத்திய கூகுள்!

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு கூகுள் நிறுவனம் ஒரு மேஜிக் செய்து ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 | 

அவெஞ்சர்ஸ் 'தானோஸ்'-க்கு இப்படி ஒரு விளம்பரமா? - அசத்திய கூகுள்!

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு கூகுள் நிறுவனம் ஒரு 'மேஜிக்' செய்து ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படம் இன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது.  பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம்,  'அவெஞ்சர்ஸ்' தொடரின் கடைசி பாகம் என்பதால் ரசிகர்களிடம் இது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவெஞ்சர்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்த கூகுள் நிறுவனம் அதன் பாணியிலே ஒரு 'மேஜிக்' வேலை செய்துள்ளது. 

கூகுள் பக்கத்தில் சென்று ஆங்கிலத்தில் 'Thanos' என்று டைப் செய்துவிட்டு, கீழ் வரும் தனோஸ்-இன் 'கை' யை கிளிக் செய்து பாருங்கள்.. கூகுளின் அந்த மேஜிக் என்னவென்று தெரியும்.  (Type 'Thanos' in Google and click the hand icon and see...)

இதன்மூலமாக, கூகுள் நிறுவனம் 'அவெஞ்சர்ஸ்' படத்தை பெருமைப்படுத்தியதோடு, அவெஞ்சர்ஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP