நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா? : கொலை முயற்சி புகாருக்கு பிரபல நடிகர் விளக்கம்!

’பார்த்திபன் கொலை செய்ய முயற்சி’ - நகைச்சுவை உணர்வுக்கு அளவில்லாமல் போய்விட்டது’ என்று, ஜெயங்கொண்டான் என்பவர் அளித்த புகார் தொடர்பாக நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
 | 

நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கி மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக, பார்த்திபன் வீட்டின் பணியாளர் ஜெயங்கொண்டான் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்திருந்தார்.

தற்போது அந்த புகாருக்கு பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், " ’பார்த்திபன் கொலை செய்ய முயற்சி’ Humour sense-க்கு அளவே இல்லாமல் போய்விட்டது!. என் புகாரின் பெயரில் நேற்று மாலை காவல் ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி, இன்று காலை அதே அலுவலகத்தில் என் மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர, கவிஞன் போல பிரபலமாகிவிட்டார் ஒருவர். மகிழ்ச்சி!" என்று பதிவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP