சிவகார்த்திகேயனை இயக்குகிறாரா சிறுத்தை சிவா?

சிவகார்த்திகேயன் தற்போது ரவிகுமார் மற்றும் ‘எஸ்.எம்.எஸ்' எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 | 

சிவகார்த்திகேயனை இயக்குகிறாரா சிறுத்தை சிவா?

ரவிகுமார் மற்றும் எம்.ராஜேஷ் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பொன்ராமின் சீமராஜா படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம்  ரவிகுமார் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படங்கள் உள்ளது. இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித்தை வைத்து 3 படங்கள் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP