கீதா கோவிந்தம் நடிகையின் நிச்சயதார்த்தம் முறிக்கபட்டதா ?

சமீபத்தில் வெளியான 'கீதா கோவிந்தம்' படம் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. ரக்ஷித் ஷெட்டியும் ராஷ்மிகவும் காதலித்து 2017 ஜூலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிச்சயதார்த்தம் முறிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
 | 

கீதா கோவிந்தம் நடிகையின் நிச்சயதார்த்தம் முறிக்கபட்டதா ?

சமீபத்தில் வெளியான 'கீதா கோவிந்தம்' படம் மூலம் மிகப் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக அந்தப் படத்தில் இடம் பெற்ற இங்கேம் இங்கேம் பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அதில் நடித்திருந்த ராஷ்மிகாவுக்கு தமிழிலும் ரசிகர் பட்டாளம் உருவானது. 

கன்னடத்தில் வெளியான 'க்ரிக் பார்டி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா. அதே படத்தில் ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டியும் ராஷ்மிகவும் காதலித்து 2017 ஜூலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன் பிறகு இடையிடையில்  இருவரின் நிச்சயதார்த்தம் முறிக்கப்பட்டது என வதந்திகள் பல பரவி வந்தது.

ஆனால், தற்போது நிஜமாகவே இவர்களின் நிச்சயதார்த்தம் முறிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி வருகிறது. சினிமாவில் அதிக கவனம் செலுத்தப் போவதால் ராஷ்மிகா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் கலந்து பேசிய பிறகே இந்த முடிவிற்கு வந்திருக்கிறார் ராஷ்மிக்கா என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து  அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP