Logo

மிரட்டும் 'மிரட்சி' : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரைலர் உள்ளே!

நடிகர் ஜித்தன் ரமேஷ், ஈனா சஹா, ஷ்ரத்தா தாஸ், சாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் "மிரட்சி". உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை எம்.வி.கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.
 | 

மேலும் ஓகே கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஜி. நாகார்ஜுனா ரெட்டி என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆனந்த் என்பவர் இசையமைத்து வருகிறார். காதல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் மற்றும் டீசரை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

எதிரிகளால் கடத்தப்படும் நாயகி, கழுத்தில் தூக்கு மாட்டப்பட்ட நிலையில், ஐஸ் கட்டிகளின் மீது நிற்க வைக்கப்படுகிறார். அந்த ஐஸ் கட்டி உருகுவதற்குள் நாயகன் அதிரடியாக நுழைந்து நாயகியை காப்பாற்றுவாரா?  அல்லது நாயகன் வருவதற்குள் நாயகியின் உயிர் பிரியுமா? என்னும் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தும் வண்ணம் இந்த டீசர்  உருவாக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP