AMR ஆக மாறும் விமல்‍‍ ’களவாணி 2’ட்ரைலர் உள்ளே

NTR, MGR,மாதிரி AMR என களம் இறங்கும், விமலின் களவாணி 2 திரைப்படத்தின், ட்ரைலரை நடிகர் அருண்விஜய் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
 | 

AMR ஆக மாறும் விமல்‍‍ ’களவாணி 2’ட்ரைலர் உள்ளே

NTR, MGR,மாதிரி AMR என களம் இறங்கும், விமலின் களவாணி 2 திரைப்படத்தின், ட்ரைலரை நடிகர் அருண்விஜய் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

’களவாணி 2’ படத்தை  உருவாக்குவதன் மூலம், விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் மீண்டும் இணைந்துள்ளனர்.  ஏற்கனவே, இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும்,  ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர். 

மேலும், களவாணி 2  படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ’களவாணி 2’ திரைப்படத்தின், ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது, இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் அருண்விஜய். 

இந்த ட்ரைலரில், முந்தைய களவாணி படத்தின் அப்பாவி அம்மாவின்: 'ஆடி போயி, ஆவணி வந்துச்சுனா' என்கிற புகழ்பெற்ற‌ வசனம் இடம் பெற்றுள்ளது.  மேலும் அரசியலில் குதிக்க உள்ள விமலுக்கு,  ஓவியா வைக்கும் பெயர் மிக அருமை.... 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP