இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் இளையராஜா!

தனது 76 ஆவது பிறந்த நாளையொட்டி, இன்று மாலை ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
 | 

இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் இளையராஜா!

தனது 76 ஆவது பிறந்த நாளையொட்டி, இன்று மாலை ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

'இசைஞானி' இளையராஜாவுக்கு இன்று 76வது பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளன்று ரசிகர்கள் அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கமான ஒன்று. 

அந்த வகையில் இன்றும், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். 

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, "எனது பிறந்த நாளையொட்டி இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறேன். வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு, எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார். 

முக்கிய அறிவிப்பு என்று இளையராஜா கூறியுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP